பஸ் கட்டணங்கள் இன்றிரவு முதல் அதிகரிப்பு

பஸ் கட்டணங்களை, இன்று (19) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 4 வீதத்தால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

பஸ் சங்கங்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

குறைந்தபட்ச கட்டணமான 12 ரூபாவில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் இன்று காலை 10 மணி முதல் போக்குவரத்து அமைச்சில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!