பஸ் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப் போவதில்லை

எரிபொருள் விலை 2 ரூபாவால் குறைந்தமைக்காக பஸ் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப் போவதில்லையெனவும், தொடர்ந்தும் குறையுமாக இருந்தால் கட்டணத்தைக் குறைக்க முடியும் எனவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

டீசல் விலை குறைப்புடன் பஸ் கட்டணம் தொடர்பில் கருத்துக்கள் மேலெழுந்துள்ளதாகவும், இன்னும் கட்டணக் குறைப்பு இடம்பெறாமல் பஸ் கட்டணத்தில் மாற்றம் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2 ரூபா குறைப்பு பஸ் கட்டணத்தில் மாற்றம் செய்வதற்கு போதுமானது அல்லவென அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அறிவித்துள்ளார்.

Sharing is caring!