பஸ் கட்டணம் இன்றுமுதல் 4 வீதத்தால் அதிகரிப்பு

பஸ் கட்டணம் இன்று (20) நள்ளிரவு முதல் அமுலாகும் வரையில் 4 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

டீசலின் விலை அதிகரிக்கப்பட்டதுடன், பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சருக்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் கட்டண அதிகரிப்பு சொகுசு பஸ்களுக்கும் அதிவேக வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கும் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மாதாந்த எரிபொருள் விலையின் மாற்றத்திற்கமைய, விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த 2 தடவைகளும் விலை அதிகரிப்பு மட்டுமே இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பிற்கமைவாக முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, முச்சக்கரவண்டி கட்டணங்கள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!