பஸ் கட்டணம் 2 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது

நேற்று (09) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 2 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

சாதாரண மற்றும் அரை சொகுசு பஸ்களுக்கு மாத்திரமே இந்த கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம். ஏ. பி.​ ஹேமச்சந்திர தெரிவித்தார்.

அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களின் கட்டணம் மற்றும் சொகுசு பஸ்களின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று முதல் அமுலாகும் வகையில் திருத்தப்பட்டுள்ள பஸ் கட்டணத்திற்கு அமைய, 12 ரூபா, 15 ரூபா, 20 ரூபா, 34 ரூபா மற்றும் 41 ரூபா பஸ் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

கட்டண திருத்ததிற்கு அமைய 25 ரூபா, 30 ரூபா , 39 ரூபா மற்றும் 44 ரூபா முதல் 67 ரூபா வரை அறவிடப்பட்ட பஸ் கட்டணம்
1 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர 72 ரூபா, 75 ரூபா மற்றும் 86 ரூபாவாக அறவிடப்பட்ட பஸ் கட்டணமும் 1 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

78 ரூபா, 81 ரூபா, மற்றும் 84 ரூபா கட்டணங்கள் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 89 ரூபா முதல் 114 ரூபா வரை அறிவடப்படும் பஸ் கட்டணமும் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!