பஸ் கட்டணம் 4 வீதத்தால் குறைக்கப்படும்

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் பஸ் கட்டணம் 4 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சொகுசு, அரைசொகுசு உள்ளிட்ட அனைத்து பஸ் சேவைகளுக்கும் கட்டண குறைப்பு அமுலாகும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதன் பயனை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Sharing is caring!