பாகிஸ்தானுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம்

இலங்கையிலிருந்து லாஹூர் மற்றும் கராச்சி நோக்கி நாளை (28) முன்னெடுக்கப்படவிருந்த விமானப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

கராச்சி மற்றும் லாஹூர் நோக்கி செல்வதற்கு தயாராகவிருந்த பயணிகள் தங்களின் விமான பயணச்சீட்டிற்கான முகவர்களை தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமது பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு செயற்படுவதாகவும் ஶ்ரீலங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பதற்ற நிலை தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், இந்த விடயம் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Sharing is caring!