பாடசாலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! உங்கள் பிள்ளைகளை உங்கள் கண்காணிப்பில் வைத்திருக்கலாம்..

பாடசாலை ஆசிரியர்கள் தொடர்பாக விசேட தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் தேசிய பாடசாலைகளில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் அல்லது அதற்கு அதிக காலம் கடமையாற்றும் ஆசிரியர்கள்

தமது பிள்ளைகளை அதே பாடசாலையில் சேர்த்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்க

நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள்

அவர்களின் பிள்ளைகளை அதே பாடசாலைகளில் சேர்த்து கொள்வதில் காணப்படும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம்

எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Sharing is caring!