பாடசாலை மாணவர்களிலிருந்து அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்

சுற்றாடலில் காணப்படும் சவால்களை எதிர்கொள்ள பாடசாலை மாணவர்களிலிருந்து அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

கம்பஹா -பண்டாரநாயக்க வித்தியாலய நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு X-BAN கண்காட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

Sharing is caring!