பாடசாலை மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

வவுனியா, தாலிக்குளம் பகுதியில் நேற்று (13) மாலை பாடசாலை மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாலிக்குளம் பகுதியிலுள்ள தோட்டக்கிணற்றில் பாடசாலை உடைகளை கழுவுவதற்காக கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்த சமயத்தில் தவறுதலாக கிணற்றினுள் வீழ்ந்து 15 வயதுடைய சொக்கலிங்ககுமார் லோபிகா என்ற பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவியின் பெற்றோர் பிள்ளையினை காணவில்லை என தேடிய சமயத்தில் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சடலத்தினை மீட்டெடுத்த பொலிஸார் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இக் கிணறு பாதுகாப்பற்ற கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!