பாண்டியன் குளம் மகா வித்தியாலயத்தின் டி. தர்ஷிக்கா வசம் தங்கப்பதக்கம்

ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் – அலியான்ஸ் பிளட்டினம் விருது வழங்கல் விழாவில் மாவட்ட ஊக்குவிப்பு செயற்றிட்டத்தில் 9ஆவது நாளுக்கான இன்றைய நிகழ்வு முல்லைத்தீவில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாடசாலை மட்ட திறமை வாய்ந்தவருக்கான தங்கப்பதக்கம் பாண்டியன் குளம் மகா வித்தியாலயத்தின் டி. தர்ஷிக்கா வசமானது.

கடந்த வருடத்தில் அகில இலங்கை பாடசாலைகள் மட்ட பளூதூக்கல் போட்டிகளில் டி. தர்ஷிக்கா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட இந்த விருது வழங்கல் விழாவில், வட மாகாண கல்விப் பணிப்பாளர், முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர், திணைக்கள அதிகாரிகள், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா மற்றும் அலியான்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஊக்குவிப்பு செயற்றிட்டத்துக்கு இணையாக பாடசாலை மாணவர்களுக்கு கால்பந்தாட்டம், றக்பி, பேஸ்போல் உள்ளிட்ட விளையாட்டுக்களின் நுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன.

இதேவேளை, பாலிநகர் மகா வித்தியாலயத்தின் ஜூடோ வீரரான என். கபில்ராஜ் வெள்ளிப் பதக்கத்தையும் முத்தையன் கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் எஸ். விமல்தன் வெண்கலப் பதக்கத்தையும் வெற்றிகொண்டுள்ளனர்.

இந்தத் தடவை பிளட்டினம் விருது வழங்கல் விழாவுக்கு அலியான்ஸ் நிறுவனம் அனுசரனை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!