பாதாள உலகக் கோஷ்டியின் தலைவரான தெமட்டகொட சமிந்த என்பவரின் சகோதரர் ஒருவர் கடவத்தையில் கைது

ஹெரோயின் கடத்தலில் ஈடுபடும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவரான தெமட்டகொட சமிந்த என்பவரின் சகோதரர் ஒருவர் கடவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து 48 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு முகத்துவாரம், முல்லேரியா மற்றும் மொரட்டுவ பகுதிகளை சேர்ந்த மூவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

Sharing is caring!