பாதாள உலகம் ஏன் தலைதூக்குகிறது – கோட்டாபய விளக்கம்

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பயங்கரவாதத்தையும், பாதாள உலக நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், தற்பொழுது இவை மீண்டும் தலைதூக்கி வருவதாகவும், அரசாங்கத்தின் இயலாமையே இவை காட்டுவதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

எமது காலத்தில் இவ்வாறான ஒரு நிலைமை காணப்படவில்லை. இன்று இந்த நிலைமைக்கு பிரதான காரணம் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடக் கூடியவர்கள் அனைவரையும் இந்த அரசாங்கம் சிறையில் போட்டுள்ளமை ஆகும்.

சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் முக்கிய உறுப்பினர்கள், புலனாய்வு அதிகாரிகள், இராணுவத்தினர் என போதைப் பொருள் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடக் கூடியவர்கள் இன்று சிறையில் உள்ளனர். இதனால், போதைப் பொருள் வியாபாரம் தடையின்றி முன்னெடுக்கப்படுகின்றது எனவும் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

Sharing is caring!