பாதீடு நாளை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாளை பிற்பகல் 2 மணிக்கு வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத்திட்ட விவாதம் குறித்த நிகழ்ச்சிநிரல், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 26 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்படி, வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை மறுதினம் 12 மணிமுதல் நடைபெறவுள்ளது.

நிலையியற் குழுவின் விவாதம் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

Sharing is caring!