பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன அமெரிக்காவில் அரசியல் தஞ்சம்

பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குரிய ஆவணங்களை அவர் அமெரிக்கத் தூதுவராலயத்தில் கையளித்துள்ளார் என சிங்கள வார இதழொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“உரிய ஆதாரங்கள் எதுவுமின்றி எனக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. என்னைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கலாம்” எனச் சுட்டிக்காட்டியே மேற்படி கோரிக்கையை அவர் விடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

ரவீந்திர விஜேகுணரட்னவை கைதுசெய்யதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் அண்மையில் மேற்கொண்டிருந்த போதிலும் அவர் திடீரென மெக்ஸிக்கோ சென்றுள்ளதால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Sharing is caring!