பாதுகாப்புப் பிரிவு உயர் அதிகாரி கைது

பாதுகாப்புப் பிரிவு உயர் அதிகாரியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் அரசாங்கம் இராணுவத்தினரைப் பழிவாங்குவதாகவும் தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரச தகவல் திணைக்களம் நேற்று  வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் ஒன்றில் இதனைக் கூறியுள்ளது.

ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு உயர் அதிகாரியொருவரிடம் விசாரணை செய்வது எவ்வாறு இராணுவத்தினரைப் பழிவாங்குவதாக அமையும் எனவும் அவ்வறிவித்தலில் கேள்வி எழுப்பியுள்ளது.

அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்தன இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

Sharing is caring!