பாதுகாப்பை பலப்படுத்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன

அரச நிறுவனங்கள் மற்றும் அரச ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கென விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

நிறுவனங்களின் பாதுகாப்பிற்காக மேலதிகமாக பொலிஸ் குழுக்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர், லேக் ஹவுஸ் நிறுவனத்திற்குள் பிரவேசிப்பதற்கு சிலர் முயற்சித்துள்ளனர்.

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பாதுகாப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Sharing is caring!