பார­தூ­ர­மான வழக்­கு­கள் உள்ள அர­சி­யல் கைதி­கள் ஒவ்­வொ­ரு­வர் தொடர்­பி­லும் சட்­டமா அதி­ப­ரு­டன் நான் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளேன்

பார­தூ­ர­மான வழக்­கு­கள் உள்ள அர­சி­யல் கைதி­கள் ஒவ்­வொ­ரு­வர் தொடர்­பி­லும் நாளை செவ்­வாய்க் கிழமை, நீதி அமைச்­சில் சட்­டமா அதி­ப­ரு­டன் நான் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளேன். ஆனால் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கு இதில் உடன்­பாடு இல்லை. அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் அர­சி­யல் ரீதி­யான தீர்­மா­னமே எடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­து­கின்­றார்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அர­சி­யல் கைதி­கள் தொடர் போராட்­டத்தை நடத்தி வரு­கின்­ற­னர். அவர்­க­ளின் விடு­தலை தொடர்­பில் கடந்த புதன் கிழமை பேச்சு நடத்­தப்­பட்­டது. கூட்டு அரசு ஆட்­சிக்கு வந்­த­போது, அர­சி­யல் கைதி­கள் விடு­தலை தொடர்­பில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட உடன்­பாட்­டுக்கு அமை­வாக பெரு­ம­ள­வா­னோர் மறு­வாழ்வு வழங்கி விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்­கள். தற்­போ­துள்­ள­வர்­கள் பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டுக்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று சட்­டமா அதி­பர் தெரி­வித்­தி­ருந்­தார்.

அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ர­தும் வழக்­கு­களை தனித் தனி­யாக ஆராய்ந்து அவர்­களை எவ்­வாறு விடு­விக்­க­லாம் என்­பது தொடர்­பில், நாளை செவ்­வாய்க் கிழமை பேச்சு நடத்­த­வுள்­ளோம். நீதி அமைச்­சர் தலதா மற்­றும் சட்­டமா அதி­ப­ரு­டன் நானும் அந்­தச் சந்­திப்­பில் பங்­கேற்­க­வுள்­ளேன்.

ஆனால், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கு இதில் உடன்­பாடு இல்லை. அவ­ரைப் பொறுத்­த­வ­ரை­யில், அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் அர­சி­யல் ரீதி­யான தீர்­மா­னம் எடுக்­கப்­பட வேண்­டும். அதுவே நிலைப்­பாடு. இது தொடர்­பில் அரச தலை­வ­ரு­டன் பேச்சு நடத்­தப்­ப­டும் – என்­றார்.

Sharing is caring!