பாரதியாரின் 97ஆவது நினைவு தினம்

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 97ஆவது நினைவு தினம் யாழில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.பருத்தித்துறை வீதியில் வைமன் வீதி சந்திக்கு (நல்லூர் பின் வீதி) அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இளைஞர்களால் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் நினைவு தினத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Sharing is caring!