பாராட்டைப் பெறும் விடயங்களுள் முக்கிய இடத்தை வகிப்பது இலவசக் கல்வியும் இலவச சுகாதார சேவையுமே ஆகும்
எமது தாய் நாடு உலகின் பாராட்டைப் பெறும் விடயங்களுள் முக்கிய இடத்தை வகிப்பது இலவசக் கல்வியும் இலவச சுகாதார சேவையுமே ஆகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலவசக் கல்வியை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு விரிவான நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதன் நன்மைகளை பெற்றுக்கொண்ட அனைவரும் சிறந்த பிரஜைகளாக தாய் நாட்டுக்காக தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S