பாராளுமன்றத்தின் மீயுயர் தன்மையைப் பாதுகாக்கக் கூடியவர்களை மாத்திரமே மக்கள் தெரிவுசெய்ய வேண்டும்

பாராளுமன்றத்தின் மீயுயர் தன்மையைப் பாதுகாக்கக் கூடியவர்களை மாத்திரமே மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தின் மீயுயர் தன்மையைப் பாதுகாக்கக் கூடியவர்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பாததன் பொறுப்பை மக்கள் ஏற்க வேண்டும். நாட்டு மக்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறும் அனைத்து விடயங்களையும் நாட்டின் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான பாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமா?. இவர்களால் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல இயலாது. இது மாட்டு மந்தை போன்றுள்ளது. அதனால் எதிர்வரும் தேர்தலிலாவது, தகுதிவாய்ந்தவர்களை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கின்றோம். எந்தக் கட்சியாகவருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தகுதி வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்

என மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாணசபை உறுப்பினர் சமந்த வித்யாரத்ன கருத்துத் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!