பாராளுமன்றத்தை உடன் கூட்டுவதற்கு மகாசங்கத்தினர் ஜனாதிபதியை வலியுறுத்த வேண்டும்

தியவன்னாவில் தீர்க்கப்பட வேண்டிய விடயத்தை பாதையில் வைத்து தீர்க்க முற்பட்டால் விளைவு மோசமாகும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய அரசியல் பிரச்சினையை தீர்க்க பாராளுமன்றத்தை உடன் கூட்டுவதற்கு மகாசங்கத்தினர் ஜனாதிபதியை வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கண்டிக்கு சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசியல் யாப்பு தொடர்பாகவோ, ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பது அல்லது பிரதமரை நீக்குவது என்பது போன்ற விடயங்கள் எனக்குரியதல்ல. அது எதுவாக இருந்தாலும் அதி உச்ச ஆதிக்கம் இறைமை என்பவற்றை கொண்ட இடம்தான் பாராளுமன்றம்.

பாராளுமன்றத்தை உடன் கூட்டி பிரச்சினையை தீர்க்க வேண்டும். இல்லாவிடில் அது பாரிய அசம்பாவிதங்களையும் விபரீதங்களையும் உருவாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Sharing is caring!