பாராளுமன்றத்தை ஒத்திவைப்பு-தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை
*தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை எனக் கூறிய சபாநாயகர் கரு ஜயசூரிய, நாளை காலை 10 மணி வரை, பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினரால், சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
* முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற வளாகத்திற்குள் வருகை தந்துள்ளார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S