பாராளுமன்றம் விரைவில் கூடுமென எதிர்பார்ப்பதாக பொதுநலவாய அமைப்பு தெரிவித்துள்ளது

இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடியினைத் தீர்ப்பதற்காக பாராளுமன்றம் விரைவில் கூடுமென எதிர்பார்ப்பதாக பொதுநலவாய அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் தொடர்பில் வௌியிட்டுள்ள அறிக்கையில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம், பட்ரீஷியா ஸ்கொட்லன்ட் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் கீழ் பாராளுமன்றத்தின் பொறுப்புகள் குறித்து தௌிவுபடுத்தும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டவாக்கத்தை பாதுகாப்பதற்காக அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களுக்கிடையிலான கருத்தாடல்களை ஊக்குவிக்குமாறும் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தேவையேற்படின் ஒத்துழைப்பு வழங்குவதற்கு பொதுநலவாய அமைப்பு மற்றும் ஏனைய சர்வதேச பங்குதாரர்கள் தயாராகவுள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரீஷியா ஸ்கொட்லன்ட் மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!