பாராளுமன்ற இணையத்தளத்திலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதிவை நீக்கி விடுமாறு வேண்டுகோள்

பாராளுமன்ற இணையத்தளத்திலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்று குறிப்பிடப்பட்டுள்ள பதிவை நீக்கி விடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் சபாநாயகர் இந்த அரசாங்கம் கலைந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இதன் பின்னரும் பாராளுமன்ற இணையத்தளத்தில் பிரதமர் என்ற பதவி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு சேர்க்கப்பட்டிருப்பது தவறானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Sharing is caring!