பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள தடை

பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு சில நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவிற்கு நான்கு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், விமல் வீரவன்சவிற்கு இரண்டு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வாக்​கெடுப்பு இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவிற்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக 41 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக 39 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் வழங்கபட்டுள்ளன.

Sharing is caring!