பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரும் தேசிய ரீதியாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் விவாதாம்

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடி வருவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்தார்.

அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக இன்று  பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மாவை சேனாதிராசா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரும் தேசிய ரீதியாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் தற்போது விவாதித்து வருவதாக மனோ கணேசன் தகவல் வௌியிட்டுள்ளார்.

Sharing is caring!