பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள்

எதிர்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு இழுப்பதற்கான பேரம்பேசும் நடவடிக்கைகைள மகிந்த தரப்பினர் இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு போலி பிரதமருக்கு ஜனாதிபதி திங்கட்கிழமை வரை காலக்கெடு வழங்கியுள்ளதாகவும் மக்கள சமரவீர தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இலஞ்சவிளையாட்டு மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாகவும் இலஞ்சம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுவினரிற்கு யோசித ராஜபக்ச தலைமை தாங்குகிவதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அந்த வயைில், இன்று காலை முதல் பேரம்பேசல்கள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள மங்களசமரவீர ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 3 மில்லியன் டொலர்கள் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!