பாராளுமன்ற உறுப்பினர் Ian Paisley 30 நாட்களுக்கு அமர்வுகளில் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் வாக்கெடுப்பு

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் Ian Paisley 30 நாட்களுக்கு அமர்வுகளில் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை அரசின் 2 கோடி ரூபாவிற்கும் அதிக செலவில் சுகபோக விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்ததால் அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்கின்ற நிலையில், அவர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுவொரு வருந்தத்தக்க விடயம் என பிரித்தானிய சபாநாயகர் John Bercow குறிப்பிட்டுள்ளார்.

Ian Paisley-யின் பிராந்தியமான North Antrim-ஐ ​சேர்ந்த 10 வீதமான சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் சிரேஷ்ட தேர்தல் அதிகாரிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக John Bercow கூறியுள்ளார்.

மேலும், Ian Paisley பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதுடன், குறித்த பிராந்தியத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Sharing is caring!