பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமானது

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று (05) முற்பகல் 10.30 மணியளவில் பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமானது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற அமர்வை இன்றும் புறக்கணித்தனர்.

அமர்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்கவுக்கு இன்றைய நாளுக்கான பிரேரணைகளை முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதேநேரம், சர்வதேச பாராளுமன்ற சங்கம் மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தில் காணப்படும் நிலையியல் கட்டளைகளுக்கு ஏற்பவே இதுவரை பாராளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கையொன்றின் மூலம் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வைப் புறக்கணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நேற்று முற்பகல் தீர்மானித்திருந்தது.

பாராளுமன்றத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் இன்று காலை இடம்பெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Sharing is caring!