பாலித தெவரப்பெரும உள்ளிட்ட அறுவருக்கு பிணை

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும உள்ளிட்ட அறுவருக்கு பிணை வழக்கப்பட்டுள்ளது.

மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி மத்துகம நீதவான் N.H.H. ஹல்பதெனிய முன்னிலையில் பாலித தெவரபெரும உள்ளிட்ட 6 பேரும் ஆஜராகிய போது இன்று (16) வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நீதிமன்ற கட்டளையை மீற பூதவுடல் ஒன்றை அடக்கம் செய்தமை தொடர்பில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தெபுவன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ட்ரொய்ட் தோட்டத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவை மீறி பிரதி அமைச்சர் உள்ளிட்ட 6 பேரும் சடலத்தை அடக்கம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Sharing is caring!