பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரி! சமூக ஊடகங்களில் காணொளியாக வெளியிட்ட பெண்

வீடமைப்பு மற்றும் சமுர்தி அமைச்சின் கீழ் வரும் மாடிக்குடியிருப்பு மேலாண்மை அதிகார சபையின் அலுவலர் ஒருவர் பெண் பணியாளர் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரிய காணொளி சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

இதனை பாதிக்கப்பட்ட பெண்ணே பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் சமுர்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெண் பணியாளரால் இந்த காணொளி 2015ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மாடிக்குடியிருப்பு மேலாண்மை அதிகாரசபையின் தலைவர் சந்திரபால திசாநாயக்க தெரிவித்துள்ளார்

இதேவேளை இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் பணியாளர் இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ முறைப்பாடு எதனையும் மேற்கொள்ளவில்லை என்று திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Sharing is caring!