பிக்கு செய்த காரியம் : பொலிஸ் அதிகாரி கழுத்து நெரித்து கொலை!

பிக்கு ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

இரத்தினப்புரி கல்லெந்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விசாரணை நடவடிக்கைக்காக பிக்கு வசித்த விகாரைக்கு அந்த பொலிஸ் உத்தியோகத்தர் சென்ற போது பிக்கு அவரின் கழுத்தை நெரித்துள்ளதாகவும் பின்னர் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அந்த சம்பவத்தின் பின்னர் அங்கு சென்றிருந்த பொலிஸாரை நோக்கி அந்த பிக்கு கைக் குண்டை வீச முயற்சித்துள்ளதாகவும் இவ்வேளையில் அந்த முயற்சியை முறியடித்து அவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!