பிரகீத் எக்னெலிகொட வழக்கில் கைதான லெப்டினன்ட் கேர்ணல் எரந்த பீரிஸ் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைதான லெப்டினன்ட் கேர்ணல் எரந்த பீரிஸ் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக, நேற்று (20) மாலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்திலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் திகதி, எக்னலிகொடவை கடத்திச்சென்று மறுதினம் விடுவித்தமை, 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி அவரை மீண்டும் கடத்திச்சென்று காணாமலாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகள் லெப்டினன்ட் கேர்ணல் எரந்த பீரிஸ் மீது சுமத்தப்பட்டுள்ளன.

Sharing is caring!