பிரதமரின் செயலாளர் சிறிசேன அமரசேகர கீழே விழுந்தார்
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது பிரதமரின் செயலாளர் சிறிசேன அமரசேகர கீழே விழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முக்கியமான தருணத்தில் அவர் கீழே விழுந்தது அபச குணத்திற்கான அறிகுறி என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றன.
பதவியை பொறுப்பேற்கும் போதே ஒருவர் கீழே விழுவதென்பது அபச குணத்தை குறிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும் குறித்த செயலாளர் கீழே விழவில்லை எனவும், அவர் கீழே அமர்ந்திருந்த நிலையில் எழுந்தார் என கூறப்படுகின்றது.
கீழே இருந்து எழுந்திருக்கும் போது குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக மஹிந்த தரப்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S