பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (20) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

அத்துடன், இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரையும் பிரதமர் இன்று சந்திக்கவுள்ளார்.

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை சந்தித்திருந்தார்.

அதேநேரம், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை புதுடில்லியில் சந்தித்து கலந்துரையாடினர்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் இந்தியாவிற்கு பயணமானார்.

பிரதமரின் விஜயத்தில் 15 பேர் கொண்ட குழுவினரும் இணைந்துகொண்டுள்ளனர்.

Sharing is caring!