பிரதம நீதியரசர் ஒருவரை சேவைக்கால மூப்பின் அடிப்படையில் நியமிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

30 வருடங்களின் பின்னர் பிரதம நீதியரசர் ஒருவரை சேவைக்கால மூப்பின் அடிப்படையில் நியமிக்க, தாம் பரிந்துரைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வின் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

புதிய பிரதம நீதியரசரை தெரிவு செய்வதற்கான அரசியலமைப்பு சபை இன்று பாராளுமன்றத்தில் கூடியுள்ளது.

தற்போதைய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்றுடன் ஓய்வு பெறவுள்ளார்.

அடுத்த பிரதம நீதியரசருக்கான பட்டியலில் நீதியரசகர்களான ஈவா வனசுந்தர, புவனேக அலுவிகாரே, சிசிர டி ஆப்ரு உள்ளிட்டோரும் சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசுந்தரவின் பெயரும் அடங்குகின்றது.

இதேவேளை, புதிய பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரை செய்யப்பட்ட ஒருவரின் பெயரும் அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!