பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் திருமண அத்தாட்சிப் பத்திரங்களை ஐந்து நிமிட சேவையில் பெற்றுக்கொள்ள நடவெடிக்கை
பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் திருமண அத்தாட்சிப் பத்திரங்களை ஐந்து நிமிட சேவையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எந்தவொரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இதனை 5 நிமிடங்களில் பெற்று கொள்ள முடியும்.
கொழும்பு மாவட்ட பதிவாளர் காரியாலயத்தில் இந்த விசேட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவையை இன்று முதல் கொழும்பு மாவட்ட பதிவாளர் காரியாலயத்தில் நாட்டின் அனைத்து மாவட்ட மக்களும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இதற்காக விசேட இரண்டு பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 1960ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான அனைத்து ஆவணங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S