பிறை தென்பட்டது….22ம் திகதி ஹஜ் பெருநாள்

நாட்டின் சில பகுதிகளில் துல்- ஹஜ் மாத தலைப்பிறை இன்று தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில்,உலக வாழ் முஸ்லிம்கள் துல் ஹஜ் 10 ஆம் நாள் ஈதுல் அல்ஹா எனப்படும் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாளை எதிர்வரும் 22 ஆம் திகதி கொண்டாடவுள்ளனர்.

இதற்கிணங்க எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மாலை மஃரிப் தொழுகையை அடுத்து நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!