பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய நிலைமை தொடரும்

நாடு முழுவதிலும் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய நிலைமை மேலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை தொடர்பில் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்ததாவது,

குறிப்பாக 20 மற்றும் 21ஆம் திகதிகளில் ஓரளவு அதிகரித்துக் காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் வட மேல் கரையோரப் பிராந்தியங்களின் பல இடங்களில், காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

மத்திய, சரபகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. வரையிலான ஓரளவு கடும் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் கிழக்குக் கரைப் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழவுள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மன்னார் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பிராந்தியங்களில் தென் மேற்குத் திசையிலிருந்து காற்று வீசும்.

இதேவேளை, நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் தென் மேற்குத் திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து காற்று வீசும்.

Sharing is caring!