புகையிரதங்களில் யாசகம் எடுப்பது இன்று முதல் தடை

புகையிரதங்களில் யாசகம் எடுப்பதும், அநாவசியமாக நடமாடுவதும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன.

புகையிரத பயணிகள் எதிர்நோக்கும் பல்வேறு இம்சைகள் மற்றும் பிரச்சனைகைள கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு அமைய அடுத்த வரும் ஒரு வார காலத்திற்குள் புகையிரதங்களில் இருந்து யாசகம் கேட்போர் அகற்றப்படுவர். அவர்கள் தொடர்ந்தும் புகையிரதங்களில் பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு.அபேவிக்ரம மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!