புதிய அரசியல் கூட்டமைப்பு…? ஜனாதிபதி தலமையில் கலந்துரையாடல்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கூட்டணியின் புதிய அரசியல் கூட்டமைப்பு தொடர்பில் நேற்றிரவு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர, தினேஸ் குணவர்தன, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, ஏ.எல்.எம், அதாவுல்லா, டக்ளஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டோர் குறித்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

புதிய அரசியல் கூட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பில் பொதுஜன பெரமுனவினால் டளஸ் அழகப்பெரும தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலரும் அடங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

மேலும், தயாசிறி ஜயசேகர, ஏ.எல்.எம். அத்தாவுல்லா, டக்ளஸ் ​தேவானந்தா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த குழுவை நியமித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் கூட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான இணக்கப்பாட்டை அடுத்த சில வாரங்களில் பெறும் வகையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குழு கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் எதிர்வரும் 16 அல்லது 17 ஆம் திகதிகளில் மீண்டும் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring!