புதிய இராஜதந்திரிகள் நால்வர் நியமனம்

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய இராஜதந்திரிகள் நான்கு பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர்.

மலேசியா மற்றும் ஜாம்பியா நாடுகளில் இருந்து உயர்ஸ்தானிகர்கள் இருவரும் , சுவிச்சர்லாந்து மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளில் இருந்து தூதுவர்க்ள இருவரும் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர் சர்வதேச ஆதரவுடன், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு கூட்டுறவை மேலும் பலப்படுத்துவதற்கு புதிய இராஜதந்திரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

Sharing is caring!