புதிய ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரி ஹேமஶ்ரீ பெர்ணான்டோ

ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரியாக, சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தர் ஹேமஶ்ரீ பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

தமக்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று முற்பகல் இவர் பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தரான ஹேமஶ்ரீ பெர்ணான்டோ, மக்கள் வங்கியின் தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!