புதிய தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோ நியமிப்பு

இந்தியாவுக்கான இலங்கை தூதராக சித்ராங்கனே வாகிஸ்வரா உள்ளார். புதிய தூதராக ஆஸ்டின் பெர்னாண்டோவை நியமித்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார்.

உயர் பதவி நியமனங்களுக்கான நாடாளுமன்ற குழு ஒப்புதலுக்கு பின்னர் அவர் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபரின் செயலாளராக பணியாற்றிய ஆஸ்டின் பெர்னாண்டோ சமீபத்தில் ராஜினாமா செய்திருந்தார். அதிபரின் ஆலோசகராகவும், கிழக்கு மாகாண கவர்னராகவும் ஏற்கனவே இவர் பணியாற்றியுள்ளார்.

Sharing is caring!