புத்திஜீவிகளினால் தயாரிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கைகளின் பரிந்துரை

கடந்த 1959, 2001 – 2002, 2008 – 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் எமது நாட்டின் புத்திஜீவிகளினால் தயாரிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கைகளின் பரிந்துரைகளை செயற்படுத்துவதாக வாக்களிக்கும் ஒர; ஆண்ணோ அல்லது ஒரு பெண்ணோ 2020 இல் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

சகோதர மொழியில் இன்று வெளியான தேசிய வார இதழொன்றுக்கு தேரர் வழங்கியுள்ள நேர்காணலில் இதனைக் கூறியுள்ளார்.

2020 ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளீர்கள் என வினவப்பட்ட போதே தேரர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் இன்னும் கலந்துரையாடி வருகின்றோம். பௌத்த மதத்தை ஏளனம் செய்து பாரதூரமான முறையில் அடிப்படை வாதிகளுக்கு செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாறவேண்டும் எனவும் தேரர் மேலும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Sharing is caring!