புறக்கோட்டை தெருவில் தொழிலாளர்கள் மீது சிலர் தாக்குதல்

புறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெருவில் தொழிலாளர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்றுரவு ஒன்பது முப்பது அளவில் வருகை தந்த சிலரால் தம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தாக்குதலுக்கு இலக்கானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரும்பு கம்பிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நான்காம் குறுக்குத் தெருவில் இரு குழுக்களிடையே நீண்ட நாட்களாக காணப்பட்ட பிரச்சினை வலுப் பெற்றதை அடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் யாரென்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புறக்கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!