புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன், புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையையும் இரு மடங்காக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையையும் அதிகரிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது 15,000க்கும் அதிகமானோர் புலமைப்பரிசில் பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!