புலி­க­ளின் போராட்­டம் – நீதி­யா­னது – நியா­ய­மா­னது

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் எமது மக்­கள் சார்­பாக மக்­க­ளு­டைய உரி­மை­க­ளுக்­காக மிக­வும் தீவி­ர­மான ஆயு­தப் போராட்­டத்தை நடத்­தி­னார்­கள். அந்த முயற்­சி­யில் அவர்­கள் வெற்றி பெற­வில்லை. ஆனால் அந்த முயற்­சி­யில் நீதி இருந்­தது, நியா­யம் இருந்­தது. அதை எவ­ரும் மறுக்க முடி­யாது.

தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சினை தீர்க்­கப்­ப­ட­ வில்லை. அவர்­க­ளு­டைய உரி­மை­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. உரித்­துக்­கள் வழங்­கப்­ப­ட­வில்லை என்ற அடிப்­ப­டை­யில் ஆயு­தப் போராட்­டம் நடத்­தப்­பட்­டது. இதை எல்­லோ­ரும் ஏற்­றுக் கொண்­டார்­கள். பன்­னாட்டுச் சமூ­கம் கூட ஏற்­றுக் கொண்­டது.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்;டமைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் உரை­கள் அடங்­கிய நூல் வெளி­யீட்டு விழா வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஆயு­தப் போராட்­டத்­தி­னூ­டாக ஒரு முடி­வைக் கொண்டு வரு­வதை இலங்கை அரசு ஏற்­றுக் கொள்­ள­வில்லை. அத­னைப் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்­கும், அரசு கூறி அவர்­க­ளை­யும் அதற்கு இணங்க வைத்­தது. போராட்­டத்தை முடி­வுக்கு கொண்டு வர முடி­வெ­டுத்­தது.

அந்­தப் போராட்­டத்தை இலங்கை அரசு முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு இந்­தியா, அமெ­ரிக்கா, கனடா, ஐரோப்­பிய ஒன்­றி­யம், ஐக்­கிய ராஐ;சியம், ஆஸ்­தி­ரே­லியா எல்லா நாடு­க­ளும் உத­வி­யது. இந்த நாடு­கள் எல்­லா­வற்­றி­லும் புலி­கள் தடை செய்­யப்­பட்­டார்­கள். ஒரு பயங்­க­ர­வாத இயக்­க­மாக புலி­கள் வெளி­நா­டு­க­ளில் தடை­செய்­யப்­பட்­டார்­கள்.

இவ்­வாறு பல வழி­க­ளி­லும் அவர்­கள் முடக்­கப்­பட்­டார்­கள். அந்­தச் செயற்­பாட்­டின் கார­ண­மா­கத் தான் இலங்கை அரசு அவர்­க­ளைத் தோற்­க­டித்­தது. தமி­ழீழ விடு­த­லைப் புலி­களை அழிப்­ப­தற்­காக பன்­னாட்­டுச் சமூ­கம் இலங்கை அர­சுக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கி­யது. இதை எல்­லோ­ரும் ஏற்­றுக் கொள்ள வேண்­டும் – என்­றார்.

Sharing is caring!