புலிகளின் ஆயுதங்கள், ஆவணங்கள்….முள்ளிவாய்க்காலில் பொலிஸ் குவிப்பு

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள தனியார் வீடு ஒன்றுக்குள் தமிழீழ விடுதலை புலிகளின் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் ஆவணங்கள் இருப்பதாக கூறி அப்பகுதியில் இன்று அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்று முற்பகல் அவ்விடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து குறித்த வீட்டினை முற்றுகையிட்டு பணியை ஆரம்பித்துள்ளனர்

Sharing is caring!