புலிகள் மீளுருவாக்கம் பற்றிக் கதைக்க- விஜயகலாவுக்கு எந்த உரிமையுமில்லை
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க வேண்டுமென்று கருத்து வெளியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வர னுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விஜயகலாவுக்கு அவ்வாறான கருத்தொன்றை வெளியிட எந்தவித உரிமையும் இல்லை.
ஏனென்றால் வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல இலங்கை முழுவதும் பிரபாகரனால் பெரும் இழப்புகள் ஏற்பட்டன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த அமைப்பின் உறுப்பினர்களேயே முதலில் படுகொலை செய்திருந்தனர். தமிழர்களைக் கொலைசெய்துதான் அவர்களின் பயணமே ஆரம்பித்
தது.இடைநிலைக் கருத்துகளைக் கொண்ட தமிழ் அரசியல் வாதிகளைப் படுகொலை செய்தனர்.
அமிர்தலிங்கம், லக்ஷ்மன் கதிர்காமர் போன்றோறையும் இவர்களே அழித்திருந்தனர்.
வடக்கு, கிழக்கில் இருந்த சிறு வர்களைப் புலிகள் அமைப்பில் இணைத்துகொண்டு போருக்கு அனுப்பினர். இதன் காரணமாக அதிகளவான சிறுவர்களின் உயிர்கள் பறிபோயின.
அவ்வாறு பெரும் அழிவுகளை ஏற்படுத்திய தீவிரவாத அமைப்பை மீள உருவாக்க வேண்டுமென்று சொல்வதற்கு விஜயகலாவுக்கு எந்தவித உரிமையும் இல்லை – – என்றார்.